"கோயில் எதுக்குன்னு கேக்குற நீங்க..! - தியேட்டர் எதுக்குன்னு கேப்பீங்களா.?" - நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கு ஜோ..!


நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு விருது விழாவில் தஞ்சை பெரிய கோயில் எதற்கு , பேலஸ் போல பராமரிக்கிறார்கள். மக்கள் கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதனை, மருத்துவமனை கட்டவும், பள்ளிக்கூடம் கட்டவும் கொடுங்கள் என கூறினார்.

மருத்துவமை கட்டவும், பள்ளிக்கூடம் கட்டவும் காசு கொடுங்க என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அது அவரது அக்கறையை காட்டுகிறது. ஆனால், கோயிலுக்கு காசு கொடுக்காதீர்கள் என்று கூறுவதற்கு மாற்று மதத்தை சேர்ந்த உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..? என்று கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

ஜோதிகாவின் மாமானாரும் பிரபல நடிகருமான சிவக்குமார் சில நாட்களுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் அந்த கோயில் கருவறைக்குள் செல்ல முடியவில்லை இது தான் சமூக நீதியா என்று ஒரு கேள்வியை கேட்டு சிக்கினார். உங்கள் படுக்கயறையை கொத்தனார் கட்டினார் என்பதற்காக கொத்தானரை உங்கள் வீட்டு படுக்கையறையில் அனுமதிப்பீர்களா..? என்று சிவாகுமாரை லாக் செய்தனர் நெட்டிசன்கள்.

அதனை தொடர்ந்து, இப்போது ஜோதிகாவும் தஞ்சை பெரியகோயில் குறித்து அவதூறாக பேசியுள்ளார். ஏற்கனவே, தமிழக மக்கள் யாரும் இந்துக்களே கிடையாது என்று சில மதமாற்ற மிஷனரிகளின் கைக்கூலிகள் கூறி வரும் நிலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் தான் தமிழக இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இது சில மதமாற்றும் மிஷனரிகளின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது போல. அதனால் தான், முன்னணி நடிகர்களை வைத்து இப்படியான கருத்துகளைபரப்புகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

கோயில் தேவையா..? என்று கேட்கும் அதே ஜோதிகா பல கோடிகளை கொட்டி காட்டப்படும் திரையரங்குகள் தேவையா.? பல கோடிகளை கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்கள் தேவையா..? திரைப்படங்கள் மக்கள் வாழ்க்கைக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பதை ஜோதிகா அவர்கள் விளக்கி கூற முடியுமா..?

கோயில்களை விடவும் திரையரங்குகளில் தான் தமிழக மக்கள் அதிக பணத்தை கொட்டுகிறார்கள். படம் பார்க்க வராதிங்க.. அந்த பணத்தை மருத்துவமனை கட்டவும் , பள்ளிக்கூடம் கட்டவும் கொடுங்கள் என்று கூற ஜோதிகாவுக்கு தைரியம் இருக்கிறதா..? 

சினிமாவை வைத்து பலர் வாழ்கை நடத்துகிறார்கள் என்றால், கோயில்கள் மூலமாகவும் தேங்காய், பழ கடை முதல் பூக்கடை தொட்டு பிரசாதங்கள் தயாரிக்கும் நபர்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மை விற்பவர்கள் என லட்சக்கணக்கான பேர் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

மேடை கிடைத்து விட்டது. மைக் கிடைத்து விட்டது. நம்மிடம் கோடி கோடியாக பணம் இருக்கிறது. செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசுவதா..? ஜோதிகா அவர்கள் இதனை எதேர்ச்சையாக பேசவில்லை. 

ஒரு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதில் நமக்கு விருது தரப்போகிறார்கள் என்றும் முன்கூட்டியே தெரியும். என்ன பேச வேண்டும், என்ன பேச போகிறோம் என்பதை ஒத்திகையும் பார்த்து வைத்திருப்பார். ஆகா, ஜோதிகா திட்டமிட்டே பேசியுள்ளார். இதற்க்கான விளைவுகளை தமிழக மக்களிடம் நீங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும். இவ்வாறாக பல்வேறுஎதிர்ப்பு குரல்களை இணையம் வாயிலாக மக்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
Powered by Blogger.