பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட போட்டோ.! - "ஹல்லோ, யாரு நீங்க.?" என்று கேட்ட குஷ்பு..! - அப்படி என்ன புகைப்படம்..?


சாந்தனு கோலிவுட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க கடினமாக உழைத்து வருபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி தான் கீர்த்தனா. 

கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும். 

ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிகி விஜய் அவ்வபோது நடனம் ஆடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை ஆள்ளுவார்.

அந்த வகையில், தற்போது யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டு " மனதை சாந்தப்படுத்தி உடம்பை ஃப்ரீ பண்ணுங்க" என்று கூறியுள்ளார். இதனை பார்த்த நடிகை குஷ்பு, ஹல்லோ நீங்க யாரு..? என்று கலாய் கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குஷ்புவின் இந்தபதிலை பார்த்த ரசிகர்கள், நீங்கள் என் இதை முயற்சி செய்யகூடாது..? என குஷ்புவுக்கு கவுண்ட்டர் கொடுத்து வருகிறார்கள்.


Blogger இயக்குவது.