"யம்மாடி..! நீ பண்ண வரைக்கும் போதும்.." - ஜோதிகாவுடன் ஒப்பந்தத்தை முறித்துகொண்ட பிரபல நிறுவனம்..!


நடிகை ஜோதிகா கோயிலுக்கு செலவு செய்யும் அதே பணத்தை ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டுறதுக்கும் கொடுங்க என்று சமீபத்தில் ஒரு விருது விழாவில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவர் சொன்ன கருத்தில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்கிறது. ஆனால், தஞ்சை பெரிய கோயிலை பராமரிக்கிறார்கள், ஹாஸ்பிட்டலை பரமாரிக்கவில்லை. அதனால், நான் அந்த கோயிலுக்கே போகவில்லை என ஏகத்துக்கும் பேசி இந்து மக்களின் வெறுப்பை பெற்றுக்கொண்டார் ஜோதிகா.

இந்த விஷயத்துக்கு தான் பணியாற்றும் சினிமாவை பிரதான எடுத்துக்காட்டாக கூறலாம். எங்களுடைய படங்கள் வரும் போது சப்போர்ட் பண்றீங்க. ஆயிரக்கணக்கில் செலவு செய்து படம் பார்கிறீர்கள் அதே பணத்தை பள்ளி, மருத்துவமனை கட்டுவதற்கும் நன்கொடையாக கொடுங்கள் என பேசியிருந்தால் பிரச்சனையே இல்லை.

ஆனால், தமிழகத்தின் அடையாளமாக, தமிழர்களின் கட்டிட மற்றும் சிற்பக்கலையின் களஞ்சியமாக விளங்கும் மாமன்னன் ராஜ ராஜ சோழன் எழுப்பிய தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக்காட்டாக கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.

பேசுவதை பேசிவிட்டு எதிர்த்து கேட்பவர்களை மத அரசியல் செய்கிறார்கள் பட்டம் கட்டி தப்பி செல்ல முயல்வது நியாயமற்றது. ஜோதிகாவுக்கு ஆதரவாக சில சிண்டு, சில்லறை இயக்குனர்கள் முட்டு கொடுத்துக்கொண்டிருப்பது அவர்களது சினிமா எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும்.

ஜோதிகா தனது பேச்சிற்கு எந்த வித நிபந்தனையுமின்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்களை பார்க்க முடிகின்றது.

இந்நிலையில், பிரபல மசாலா பொருட்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான சக்தி மசாலா மக்களின் எதிர்ப்பை உணர்ந்தது நடிகை ஜோதிகா-வை தங்களுடைய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டர் ஒப்பந்த காலம் முடியும் முன்பே ஒப்பந்ததை முறித்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Blogger இயக்குவது.