"உன் மாமனார் காசுல கட்டல.. " - ஜோதிகாவின் திமிர் பேச்சு - கிழி கிழி என கிழிக்கும் நெட்டிசன்கள்..!


பிரபல டிவியில் விருது வாங்கும் நிகழ்வில் ஜோதிகா பேசியுள்ள பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், சமூகவலைத்தளவாசிகளின் கோபத்தினையும் தூண்டி விட்டுள்ளது. 

நேற்று JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் நடிகை ஜோதிகா நடிகை சிம்ரனின் கையினால் விருதினைப் பெற்றார். அதன் பின்பு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவமனை தட்டுப்பாடு காரணமாக அதைக்குறித்து பேசியுள்ளார். 

அவர் பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதர்க்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் என்று தெனாவெட்டாக பேசியதுடன் அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று பேசியுள்ளார். 

இதனைக் கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் தனக்கு மட்டுமே சமூகஅக்கறை இருப்பது போன்று இப்படியா பேசுவது..? என்றும் இவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து போடும் மேக்கப், கோடி கோடிகளாக கொட்டி எடுக்கப்படும் படம், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அதற்கு வரும் உடைகள், கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்கி தங்களுடைய பேங் அக்கவுண்டில் வாங்கோ போட்டுக்கொள்ளுதல் இதெல்லாம் எதற்கு, மருத்துவமனை கட்டலாம், பள்ளிகூடம் கட்டலாம் என இவர்களால் கேட்க முடியுமா..? 

யாரோ ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தான் தொடர்ந்து இப்படியான கருத்துகளை நடிகர், நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள். இப்படியெல்லாம் பேசினால் தன்னை ஒரு போராளி, அறிவு ஜீவி என நினைத்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருகிறார்கள் என்று பயங்கர கோபத்தினைக் காட்டியுள்ளனர்.


இன்னும் சிலர் இவர் தான் கொங்கு மண்டலத்தின் மருமகளா..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கொச்சை கொச்சையாக அவரது பேச்சை கிழி கிழி என கிழித்து வருகிறார்கள்.
Powered by Blogger.