சிவாஜி The Boss படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விருந்தது இவரா..? - ப்ப்பா...! கொல மாஸா இருந்திருக்குமே..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சிவாஜி The Boss படத்தின் வெற்றியைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வெளியான நாள் முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுதும் 98% திரையரங்குகளில் சிவாஜி திரைப்படம் தான் ஒடியது. A,B,C என அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்திய இந்த படத்தை பார்க்க பட்டிதொட்டியெங்கும் உள்ள ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த அதிகாலை காட்சி, நள்ளிரவில் படம் ரிலீசாவது போன்ற ட்ரெண்டுகளை உருவாக்கி விட்டதே சிவாஜி தான். உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். நடைமுறையில் யோசித்து பார்த்தால் இது மாதிரி எல்லாம் நடக்குமா..? போன்ற விஷயங்கள் பல இந்த படத்தில் இருந்தாலும் ரஜினி நடித்தால் எல்லாம் சாத்தியமே என்பதை பொருட்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கியமான காரணம் படத்தின் வில்லன் சுமன். நீண்ட நாட்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சுமன் இந்த படத்தில் வில்லனாக மிரட்டினார்.
ஆனால், சுமன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் சத்யராஜ் தானாம். ஆனால், சத்யராஜிற்கும், ரஜினிக்கும் இருக்கும் பனிப்போர் காரணமாக படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி ஒதுங்கி கொண்டாராம்.