42 வயதில் முதல் குழந்தைக்கு தாயான நடிகை சங்கவி - ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே..! - வைரலாகும் புகைப்படம்..!
தமிழ் திரையுலகில், 90-ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத நடிகைகளில் சங்கவியும் ஒருவர், நடிகர் அஜித்தின் அமராவதி படத்தில் நடிகையாக அறிமுகமான இவர், அதன் பின் விஜய், கார்த்திக் என பல நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
வட்டசட்டமான, கொளுக்கு மொழுக்கு என இருந்த அவர் 90ஸ் கால கட்டத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாக வளம் வந்தார்
40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, 42 வயதாகும் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து 6 தினங்களுக்கு முன்பு, அன்னையர் தினத்தையொட்டி குழந்தையுடன், தான் இருக்கும் புகைப்படத்தை சங்கவி வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சங்கவியா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.