வெளியான நாள் அன்றே 4K தரத்தில் "பொன்மகள் வந்தாள்" - தமிழ்ராக்கர்ஸ் கை வரிசை..!


நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரீலீஸான முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையதளத்தில் ரிலீஸ் செய்து படக்குழுவை அதிர வைத்துள்ளது.

படக்குழு எதற்கு அதிர போகின்றது. தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகியிருந்து தமிழ் ராக்கர்ஸில் HD தரத்தில் ரிலீஸ் ஆகியிருந்தால் பராவயில்லை. படத்தை இரண்டு மடங்கு லாபத்திற்கு விற்று தள்ளியாச்சு. இனி ஷாக் ஆக வேணியது அமேசான் நிறுவனம் தான்.

ஜோதிகா நடிப்பில், அவரது கணவர் சூர்யாவின் தயாரிப்பில் நேற்று (மே 29) வெளியான படம் பொன்மகள் வந்தாள். நேரடியாக ஓடிடி தளத்தில் (அமேஸான் பிரைம்) வெளியான முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற பெருமை இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

திரைத்துறையினரின் ஒரு தரப்பு எதிர்ப்பையும் மீறி, ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யா இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார்.முக்கியப் பிரமுகர்களுக்கு இந்தப் படத்தின் பிரிமியர் ஷோ நேற்று காண்பிக்கப்பட்டது. படத்தைப் பற்றி பலரும் பாசிட்டிவாக ரிவ்வியூ கொடுத்தனர்.

நடிகர் சூர்யா, ஒரு தயாரிப்பாளராகவும் பார்வையாளராகவும் தனக்கு படம் திருப்தி தந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கிடையே அமேஸான் பிரைமில் படம் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் அதே ஹெ.டி தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது.

இதனால் படத் தயாரிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அமேஸான் பிரைம் நிறுவனம் இது தொடர்பாக தமிழ் ராக்கர்ஸ் மீது சட்ட நடவடிக்கை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
Blogger இயக்குவது.