அமேசன் ப்ரைம்-ல் இருந்து நீக்கப்பட்ட "படையப்பா" - அதிரடி நடவடிக்கை எடுத்த ரஜினிகாந்த்..!


சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள் பலவற்றை ஆன்லைனில் பார்க்க உதவுகிறது அமேசான் ப்ரைம் வீடியோ. இதிலிருந்து ‘படையப்பா’ திரைப்படம் திடீரென நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதிய திரைப்படங்களை வெளியிடும் ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமானது அமேசான் ப்ரைம். இதில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சொந்தமாக தயாரித்து நடித்து 2000ல் வெளியான “படையப்பா” திரைப்படமும் வெளியாகியிருந்தது. 

இந்த படத்தை அமேசானில் வெளியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி கோரப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேசான் தளத்திலிருந்து ‘படையப்பா’ நீக்கப்பட்டுள்ளது. 

மேலும், படங்களை ஆன்லைன் தளங்களுக்கு வழங்க சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கவனித்து டிவிட்டரில் ட்ரெண்டாக்கினர். இது ரஜினியின் கவனத்திற்கு சென்று அவர் எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக "படையப்பா" திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ லிஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.