"பெரட்டி வுடு.. செதற வுடே.." - "மாஸ்டர்" படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி..! - உறுதியான தகவல்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்". இந்த படத்தின் வேலைகள் முடிந்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகியிருக்க வேண்டியது.
ஆனால், படத்தில் ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஊரடங்கில் இருந்து சினிமா பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள சூழலில் படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்பது குறித்து தெளிவான முடிவெடுக்க முடியாமல் தயாரிப்பு தரப்பு குழம்பி வந்தது.
இதனை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என உறுதியாக தெரியாததால், அதைப் பற்றியும் அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை ஒரே அடியாக தீபாவளி பண்டிகைக்கு ஒத்திவைத்து தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி படத்தின் டிரைலரை மட்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள்.