மிஸ்கின் அதிரடி - அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தானாம்..! - மாஸ் தகவல்..!
மிஷ்கின் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் சமீபத்தில் செம்ம ஹிட் அடித்தது.
மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் வெற்றியடையவே
அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது என படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி
விஷால், பிரசன்னா, கெளதமி, ரகுமான் உள்ளிட்ட பலர் நடிக்க ‘துப்பறிவாளன் 2’
படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்தது.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும்
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே துப்பறிவாளன் 2 படத்தை
மேற்கொண்டு விஷாலே இயக்குவார் என முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
விஷாலும் ஒரு பேட்டியில் அதனை உறுதி செய்தார்.
இதனால், இயக்குனர் மிஷ்கின் மிகவும் நொந்து போனார். மேடையிலேயே விஷால் பற்றி பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். தன்னுடைய தம்பியை விஷால் தே**** பையா என்று திட்டியதாக குமுறினார்.
இது மிஷ்கின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத்தொடர்ந்து மிஷ்கின் அடுத்து யாருடன் இணைவார் என்பது எல்லோரின் எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், சமீப காலமாக ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகரான அருண்விஜய்-யை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.