அட..! - நம்ம வரலட்சுமிக்கு கல்யாணம்..! - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி படங்களில் வாய்ப்பு பெரும் சில நடிகைகள் மத்தியில் முழு திறமையால் முன்னேறியுள்ளவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தற்போது, கைவசம் 7,8 படங்களை வைத்து இருக்கும் இவர், தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் ’சேஸிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் இல்லாமல் சண்டை போட்டுள்ளார்அம்மணி.
சினிமாவில் அறிமுகமான புதிதில் ஃபிட்டாக இருந்த இவர் சில வருடங்களில் உடல் எடை கூடி பெருத்து போனார். இடையில், நடிகர் விஷாலுடன் காதலில் இருக்கிறார் என்ற தகவல் வந்தது. விஷால் நடிகர் சங்க தலைவரானதும் நடிகர் சரத்குமாரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார் விஷால். இதனால், கடும் அதிருப்தியடைந்த வரலக்ஷ்மி விஷாலை ப்ரேக் அப் செய்தார் என்ற பேச்சும் உள்ளது.
இந்நிலையில், இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும
விராட் கோஹ்லி ஆகியோருக்கு மாப்பிள்ளை க்ளோஸ் ஃபிரண்ட் என்றும்
கூறப்படுகிறது. வரலக்ஷ்மியின் குடும்பம் மாப்பிள்ளையின் குடும்பமும் பல
ஆண்டுகளாக நண்பர்களாம்.
வரல்கஷ்மியும்,அந்த கிரிக்கெட் வீரரும் காதலில் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் இவருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருக்கிறார்களாம்.
ஏற்கனவே, ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான், அபிமன்யு மிதுன் என்ற கிரிக்கெட் வீரரை
காதலித்தார். இவர்களின் காதலை அறிந்த குடும்பத்தார் இருவருக்கும் திருமணம்
செய்து வைத்தனர்.
இந்த ஜோடிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது
சரத்குமாரின் குடும்பத்திற்கு மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் மாப்பிள்ளையாக
வரவுள்ளார்.