மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாதி இப்படிதான் இருக்கும் - பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல் - எகிறிய எதிர்பார்ப்பு.!
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் "மாஸ்டர்". விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.
மேலும் விஜய்யின் சொந்த தயாரிப்பில் படம் என்பதால் அவரது நெருங்கிய நண்பர்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகி அனைத்து பாடல்களும் செம ஹிட் அடித்துள்ளது.
கடந்த, ஏப்ரல் 9-ம் தேதி இந்த படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது நிலவிவரும் கொரானா சூழ்நிலையால் படத்தின் ரிலீஸ் தேதி . இதனால் குறித்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போன வருஷத்தை மாஸ்டர் படத்தில் நடித்த பிரபலங்கள் தங்களது ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பலரும் படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றன.
அந்தவகையில் மாஸ்டர் படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றும் மேயாத மான் பட இயக்குனர் ரத்னா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், மாஸ்டர் படம் இடைவேளைக்கு பிறகு படுபயங்கரமாக இருக்கும் என கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். இதனால், படத்தின் ரிலீஸ் தேதியை நோக்கி ரசிகர்கள் காத்திருகிறார்கள்.