மாடசாமிக்கே சவால் விடும் ஹேர் ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா - வைரலாகும் வீடியோ..!
தளபதி விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமான பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, இன்று ஹாலிவுட் படங்களில் அசத்தி வருகிறார்.
தன்னை விட பத்து வயது குறைந்த ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் பிரியங்கா சோப்ராவுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஐந்தரை கோடி ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.
அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் மில்லியன் கணக்கில் லைக்குகள் சாதாரணமாக வந்து விழுகின்றன. எப்போதும் விதவிதமான சிகை அலங்காரம் மற்றும் உடைகளை அணியும் இவர் தற்போது வில்லு படத்தில் வரும் வடிவேலுவின் ஹேர் ஸ்டைலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இணையத்தை கலக்கி வரும் அந்த வீடியோ இதோ,