பசி என்ற நோய்க்கு தடுப்பூசி வேணும் - விஜய்சேதுபதியின் அடடே பேச்சுக்கு அதிரடி பதிலடி கொடுத்த "திரௌபதி" இயக்குனர்..!


சமீப காலமாக சில நடிகர்கள், நடிகைகள் நடிப்பதை விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள். நானும் சமூக கருத்து சொல்லுவேன். நானும் போராளி தான் பேர்வழி என்று நினைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருகின்றது.

இதில் கொடுமை என்னவென்றால், சினிமா பிரபலங்கள் சொல்லிவிட்டால் போதும் ஆஹா.. ஓஹோ.. என புகழும் ஒரு ரசிகர் கூட்டம். ஒரு பிரச்சனையின் தன்மை என்ன என்றே தெரியாமல் எடுத்தேன் கவுத்தேன் என்கிற ரீதியில் தான் சில நடிகர்களின் பேச்சு இருக்கின்றது.

அந்த வகையில், COVID 19 என்ற ஒற்றை நோய்க்கு ஒட்டு மொத்த உலகமும் அரண்டு போய் கிடக்கும் இந்த நிலையில் மாநில, மத்திய அரசுகள் மிகவும் கடுமையாக நோய் தொற்றை எதிர்த்து போராடி வருகின்ற சூழ்நிலையில், சில பிரபலங்கள், நோய் தொற்றை குணமாக்க என்ன வழி..? என்பதில் ஆரம்பித்து  தொழில் முடங்கிவிட்டது என ஃபர்ஸ்ட்  கியர் போட்டு, அப்படியே நாட்டின் பொருளாதாரம் என்ன ஆவது என ஸ்லோவாக பிக்கப் செய்து, மெதுவாக அரசு என்ன செய்கிறது..? தூங்குகிறதா..? என்று ஒரு லெஃப்ட் எடுத்து ஏழை மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்று டாப் கியரில் பறக்கிறார்கள்.

ஆனால், நாடு முழுதும் ரேஷன் பொருட்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக கொடுத்து தவணைகளை கட்டுவதில் மூன்று மாதம் விலக்கு பெற்று தந்து என சாத்தியமே இல்லாத பல விஷயங்களை சாத்தியமாக்கி கடுமையாக போராடி வருகின்றது மத்திய, மாநில அரசுகள்.

ஆனால், குறிப்பிட்ட சில நடிகர்கள் தப்பி தவறி கூட அரசின் முயற்சிக்கு பாராட்டுகள் தெரிவிப்பதோ..? அல்லது ஏதேனும் உருப்படியான யோசனை கொடுப்பதோ கிடையாது. இப்படியான இந்த இக்கட்டான சூழ்நிலையை மேலும் கடினமாக்குவது போல தான் உள்ளது சில பிரபலங்களின் கருத்து, நேர்மறையான கருத்துக்களை, பாசிட்டிவான பேச்சுகளை பேசுவதில் ஈடுபாடு காட்டுவதே தெரியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் மட்டும் பல இக்கட்டான சூழ்நிலைகள் கடந்து வந்து விட்டோம் இதுவும் கடந்து போகும். நம்பிக்கையுடன் இருப்போம் என கூறியதாக நியாபகம்.

நடிகர் விஜய் சேதுபதி சில நாட்களுக்கு முன்பு பசிக்கு என்ற நோய்க்கு ஒரு தடுப்பூசி கண்டு பிடிக்க வேண்டும் என்று அடடே கருத்து ஒன்றை கூறினார். இதில், கொடுமை என்னவென்றால் பலரும் இந்த கருத்தை ஆஹா.. ஓஹோ.. என்று கொண்டாடினார்கள் என்பது தான்.

இந்நிலையில், திரௌபதி படத்தின் இயக்குனர், "பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா.." என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.

ஏதோ ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு, யாருடைய மனதையோ குளிர்விப்பதற்காக சில நடிகர்கள் இப்படியான கருத்துகளை கூறி நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை மேலும் கடினமாக்க முயல்வது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் தெரிந்தே செய்கிறார்களா..? அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா..? என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.



பொதுமக்கள், இணைய வாசிகள் என யாராக வேண்டுமானால் இருங்கள் பிரபலமாக இருக்கும் ஒருவர்,உங்களுக்குபடித்த நடிகர்களாக இருந்தாலுமே அந்தகருத்தின் உள்நோக்கம், அந்த கருத்தால் என்னபயன்..? இது நிஜமாகவே மக்களின் நலனை முன் வைத்து தான் சொல்லப்பட்டதா..? அல்லது யாரோ ஒரு சிலர் அரசியல் மற்றும் தனி நபர் லாபத்திற்காக சொல்லப்பட்டதா..? என்று புரிந்து கொள்ளுங்கள். இங்கு காரணமின்றி எதுவும் நடப்பதில்லை.
Blogger இயக்குவது.