"குளிப்பதை காட்டுறீங்க..! ஆனா, ட்ரெஸ் மாத்துறத காட்ட மாட்டறீங்க..?" - விஜய் சேதுபதியின் தெனாவெட்டு பேச்சு..! - குவியும் எதிர்ப்பு..!


சமீப காலமாக நடிகர்கள் மதம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்து தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி பெருமான்மை ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள்.

கேட்டால் மூட நம்பிக்கையை எதிர்கிறேன் என்பார்கள். முதலில், இன்னொருவன் நம்பிக்கையை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன..? அந்த மூட நம்பிக்கையால் கடவுள் மறுப்பு கொள்கை பேசுவோர் பட்ட கஷ்டங்கள் என்ன..? என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள்.அவன் வணங்கும் கடவுள்.அவனுடைய நம்பிக்கை.இதற்கு இடையில் புகுந்து கொண்டு அவனுடைய நம்பிக்கையை காயப்படுத்தி நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள் என்று கேட்டால் தீண்டாமை என்று வேறு வழிக்கு நம்மை கூட்டி செல்வார்கள்.

சாதி மனிதன் செய்த மிகப்பெரிய தவறு. சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறும்எவரும் இன்னொரு சாதியினரை மட்டம் தட்டி, கொச்சைப்படுத்தி பேசுகிறார்களே தவிர அதனை ஒழிக்க அவர்கள் எடுத்த வழி என்ன..? என்றால் பதில் கிடையாது.

அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி தன்னை தீவிர கடவுள் வெறுப்பாளராக காட்டிக்கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடுவராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் கலந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி ஒரு எபிசோடில் மிகவும் அருவருப்பான ஒரு விஷயத்தை அவருக்கே உரிய பாணியில் அசால்டாக சொல்லியிருகிறார்.

அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என கிண்டலடிக்கும் விதத்தில் பேசியுள்ளார். 

’’இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். ஆனால், அபிஷேகம் செய்து முடிந்த பின் திரை மூலம் சாமி சிலை மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த ஒரு சிறுமி அவளது தாத்தாவிடம் "எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். துணி மாற்றும்போது காட்ட மாட்டேன் என்கிறார்கள்?’’ என்று சந்தேக கேள்வி கேட்பதாகவும், அதற்கு தாத்தா ’’சாமி குளிக்கும்போது காட்ட்டுவார்கள். உடை மாற்றும்போது மூடப்படும்’’என்று கூறுகிறார். 

அதற்கு அந்த சிறுமி , ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என கேட்டதாக தன்னுடைய கருத்தை ஒரு சிறுமி கூறியது போல பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்த பேச்சு பலருடைய எதிர்ப்பையும், கண்டனங்களையும் பெற்று வருகின்றது. அபிஷேகம் செய்யும் ஆடையுடன் தான் கடவுள் விக்ரகங்கள் இருக்கும். ஆனால், அபிஷேகம் முடிந்த பிறகு திரையை மூடி விட்டு தான் புத்தாடை உடுத்தி அலங்காரம் செய்வார்கள். இதனைவிஜய் சேதுபதி இப்படி இழிவாக பேசியிருப்பது மிகவும் தவறு.

கோயில்களில் மேலாடையின்றி சிலைகள் உள்ளன என கூறுகிறார்கள். அந்த கோயில்கள் இன்று நேற்று கட்டப்பட்டது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. 

அப்போதைய இந்தியா கலாசாரத்தின் படி கட்டப்பட்டுள்ளன. அங்கிலேயர் வருகைக்கு முன்பு பெண்கள் இயல்பாகவே மேலாடை அணியாமல் தான் இருந்தார்கள். பெண்களுடைய மார்பகங்கள் புனிதமான ஒன்றாகவே பார்க்கப்பட்டன. 

பெண்களே உலகம். பெண்கள் தான் எல்லாம் என்பதை சொல்லும் விதமாகவே கோயில்களில் பெண்ககடவுளின் சிலைகள் மேலாடை இன்றி அந்த காலத்தில் எப்படி இருந்தார்களோ அப்படி இருந்தன. ஒருவேளை கோயிலுக்குள் செல்லும் போது ஒருவனுடைய மனம் அலை பாய்ந்தால் அவனுக்கு கர்ப்ப கிரகத்தில் இருக்கும் கடவுளை தரிசிக்க தகுதி இல்லை என்பது பொருள்.

கடவுள் என்றால் என்ன..?


கடவுள் என்பதன் பொருளே "கட + உள் = கடந்து உள்ளே செல்" என்பது தான். காதல், காமம், ஆசை, எதிர்பார்ப்பு, பொறாமை, வஞ்சம் , லாபம், நஷ்டம், கஷ்டம், வறுமை, செழிப்பு அது, இது என எதுவாக இருந்தாலும் அதனை கடந்து உள்ளே சென்றால் தான் கடவுளை நீங்கள் உணரவே முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிஜமாகவே இவற்றை எல்லாம் கடந்து வந்து விட்டாயா என்பதை சோதிக்கவே அப்படியான சிலைகள்அமைக்கப்பட்டிருகின்றன. இதையெல்லாம் கடந்த ஒருவன் மனது எப்படி புனிதமாக இருக்கும். அந்த புனிதமான மனதுடன் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் விக்ரகத்தை காணும் போது அதிலிருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல் அவனுக்குள் எளிதாக நுழைந்து அவனுடைய வாழ்வில் நல்ல பல ஏற்றங்களை கொடுக்கும். 

ஆனால், வெறுமனே கோயில் எதுக்கு..? சாமி எதுக்கு..? அது எதுக்கு..?இது எதுக்கு..? என கேட்டு தன்னை தானே ஒரு அறிவாளியாக நினைத்துக்கொள்கிறார்கள் சிலர். இதற்கெல்லாம் என்னகாரணம் என்று கேட்டோம் என்றால் கடவுள் நம்பிக்கையை வைத்து அரசியல் நடக்கிறது என்பார்கள். ஆனால், அதே கடவுள் மறுப்பு கொள்கையும் வைத்தும் அரசியல் தான் நடக்கிறது என்றால் அப்படி கேட்பவருக்கு மதவாதி பட்டம் கட்டுகிறார்கள் என்பது வேதனை.

கடவுள் வந்து கத்தியை பிடுங்கி வீசமாட்டார்..!


இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்திசம் என என்ன மதமாக வேண்டுமானால் இருக்கட்டும். சிவன் மீது அதீத கடவுள்பக்தி கொண்டவர், அல்லா மீது அளவுகடந்த ஈடுபடும், அன்பும் கொண்டடு ஐந்து வேலை தொழுபவர், இயேசு கிருஸ்துவை அன்றாடம் ஜெபிப்பவர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியும் ஒருவன் கத்தி எடுத்து நம்ம குத்த வந்தால் கடவுள் வந்து அவனது கையை தட்டி விட்டு கத்தியை பிடிங்கி வீசமாட்டார் என்பது.

ஆனாலும், தாங்கள் வணங்கும் இறைவன மனதுருக வணங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். கடவுளை நம்புபவர்களுக்கு இருக்கும் புரிதல் கூட சோ கால்டு கடவுள் வெறுப்பாலர்களுக்கு புரிவதில்லை. ஆனால், கடவுள் மறுப்பு என்ற பெயரில் சமீப காலமாக நடிகர், நடிகைகள் பேசும் பேச்சுகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருகின்றது என்பது நிதர்சனம்.

கடந்து உள்ளே செய்ய முயலுங்கள் விஜய் சேதுபதி அவர்களே..!

Blogger இயக்குவது.