"சர்வைவா" பாடலுக்கு பரதம் ஆடி அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய தொகுப்பாளினி பாவனா.! - இதோ வீடியோ
பிரபல விஜய் ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் ஜோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
அதன் பின்னர் அடுத்தக்கட்டமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎலில் தொகுப்பாளராக மாறினார். இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில்,நேற்று தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் , பரதத்தில் கை தேர்ந்தவரான பாவனா அஜித்தின் விவேகம் படத்தில் இடம் பெற்ற ஹிட் படலமான சர்வைவா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி தமிழ் திரையுலகின் ஜென்டில் மேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.