உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா..? - குஷ்புவை விளாசும் நெட்டிசன்கள்..!


சமீப காலமாக சில இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் பலரும் நடிப்பதை தவிர எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள். தங்களுக்கு கிடைத்துள்ள "பிரபலம்" என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி மக்கள் மீதும், தங்களை ரசிக்கும் ரசிகர்கள் மீது அவர்களுடைய சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளை உமிழ்கிறார்கள். 

இப்படி கருத்து கந்தசாமிகளாக மாறியுள்ள நடிகர், நடிகைகளில் நடிகை குஷ்புவும் ஒருவர். அந்த வகையில், சமீபத்தில், உணவுவகைகளை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என நடிகைகளுக்கும், சமூக வலைதள ஆர்வலர்களுக்கும் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஒரு வேளை உணவு கிடைக்காமல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் சிரமப்படும் தருணத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்காது என அவர் கூறினார். 

விரும்பிய உணவுகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஆனால் அதை பொதுவெளியில் காட்சிப்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்பது தான் குஷ்புவின் கோரிக்கையாக உள்ளது.

ஆஹா.. என்ன அருமையான மனசு என்று சில்லறைகளை சிதறவிட்டனர் நெட்டிசன்கள். ஆனால்,குஷ்பு நேற்று இரவு செய்த வேலை அவர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவரது அம்மாவிற்கு நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க தான் சாப்பிடும் பொருட்களின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று கூறினீர்கள். 

இப்போது, கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளீர்கள். நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் நேரத்தில் உங்களுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் கேக்குதோ..? - உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா..? என்று விளாசி வருகிறார்கள்.


Blogger இயக்குவது.