"ஒழுங்கா பாத்தியாடா.." - கேவலமாக பேசிய சூர்யா ரசிகரை விளாசிய பிரபல நடிகர்..!
நடிகை ஜோதிகா நடிப்பில் நேரடியாக இணையத்தில் வெளியான "பொன்மகள் வந்தாள்" திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், இந்த படத்தை பார்த்த நடிகர் சரத்குமாரும் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறியிருந்தார்.
அவர் கூறியதாவது, இது மிகச்சிறந்த படம், இயக்குனர் ப்ரிட்ரிக் நன்றாக வடிவமைத்துள்ளார் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் பெருமைகள் அனைத்தும் உங்களையே சேரும் என்று பதிவிட்டு ஹாஸ் டேகில் பொன்மகள்வந்தாள், ஜோதிகா மற்றும் சூர்யா சிவகுமார் போன்றோரை டேக் செய்திருந்தார்.
ஆனால், இதனை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர்," யா௫க்கு வாழ்த்து சொல்றிங்க யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போற தயவு செய்து தமிழில் பதிவு போடுங்க..அப்போ ஏன் ஆங்கிலயேரை விரட்டி அடித்தீர்கள் தமிழை நீங்களே பேசலான்னா பின்ன யா௫ பேசுவா " என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சரத்குமார், "கண்டிப்பாக சகோதரா" என்று இனி தமிழில் பதிவு செய்கிறேன் என்று கூறியிருந்தார். மற்றொரு சூர்யா ரசிகர் ஒருவர், "சூர்யா டிவிட்டரில் இருக்கிறார் அவரை டேக் செய்து ட்வீட் போடுடா" என்று ஒருமையில் பேசியுள்ளார்.
இதனை பார்த்து கடுப்பான சரத்குமார், " ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா.." என்று அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்தார். பிறகு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த பதிலை நீக்கி விட்டார்.