வைரலாகும் "மாஸ்டர்" படத்தின் தணிக்கை சான்று..? : ரன்னிங் டைம்-ஐ பார்த்து ரசிகர்கள் பீதி..!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் தோற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போயிருக்கிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக இருந்தது.
மேலும், படத்தின் ரன்னிங் டைம் 181 நிமிடம். அதாவது, 3 மணி நேரம் 02 நிமிடம் என்று குறிபிடப்படிருந்தது. மூன்று மணி நேரம் ரன்னிங் டைமா..? என்று ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள்.
ஆனால், இது குறித்து விசாரித்த போது, அது முற்றிலும் பொய்யான ஒரு புகைப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டில் இருந்து மாஸ்டர் படத்தின் தணிக்கை சான்று எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.