இரண்டு வயது குழந்தைக்கு தாயான நடிகை அசின் இப்போது எப்படி இருக்கார் பாருங்க.!- புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் திரிஷா, நயன்தாராவுக்கு ககடும் போட்டியாக இருந்தவர் நடிகை அசின். பொரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். கவர்ச்சியான உடை அணிந்தாலும் மோசம் என்று கூறாத அளவிலான உடைகளுடன் தான் தோன்றுவார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகையான இவர் ஜெயம் ரவி நடித்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். பிறகு சிரித்த காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார். விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
அதன் பிறகு, கஜினி, போக்கிரி, சிவகாசி, வரலாறு, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்..இதனாலேயே இவர் ராசியான நடிகை என தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பப்பட்டவர்.
பொதுவாக தமிழ், தெலுங்கில் வெற்றிகரமான நடிகையாக வளம் வருபவர்களுக்கு கூடவேபாலிவுட் ஆசையும் வந்து விடும். அந்த வகையில், அசினும் பாலிவுட் மோகத்தால் பாலிவுட்டில் நடிக்க சென்றார். ஆனால், பாலிவுட்டில் குட்டியான உடைகள் மோசமான நடன அசைவுகள் என கவர்ச்சியில் தாராளம் காட்டினார்.
சில பாலிவுட் படங்களில் நடித்த பிறகு சொல்லிக்கொள்ளும் படி சரியான சினிமா வைப்பு கிடைக்காததால் வீட்டில் இருந்த அவர் இந்தியாவில் பிரபல நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் ஷர்மா என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் அசின். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
கணவர், குழந்தை, குடும்பம் என்று அவரின் வாழ்க்கை முழுமையடைந்தது. திருமணம் என்பது பெண்களின் மறுவாழ்வு என்பது இவருக்கு பொருத்தமாக உள்ளது. சினிமாவில் தான் நடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், சுத்தமாக மீடியா வெளிச்சமே தன் மீது படாமல் பார்த்துக்கொள்ளும் இவரை, எந்த மீடியாவிலும் பார்க்க முடிவதில்லை என்பதால் ரசிகர்கள் சற்றே வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் அழகு சாதனா பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு ஸ்டேஜ் ஷோ-வில் கலந்து கொண்ட அசினின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.