"No" சொன்ன விஜய், "Yes" சொன்ன அஜித் - ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம்..!


தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் நடிப்பில் எந்த படம் திரைக்கு வந்தாலும் அவை ரிலீஸ் ஆகும் நாள் தமிழ்நாடு முழுதும் உள்ள திரையரங்குகளில் திருவிழா போல் இருக்கும். 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அஜித் நடிப்பில் உருவாகி வந்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்க்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் சினிமா பயணத்தை பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு படங்கள் தான் அவர்களின் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்.

சில படங்கள் நடிகர்களின் சினிமா வாழ்கையையே திருப்பி போட்டு விடும். அந்த வகையில், ஆரம்ப காலத்தில் நடிகர் அஜித் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக உதவி, வாழ்க்கையையே மாற்றிய மற்றும் தேசிய விருது பெற்ற படம் "காதல் கோட்டை". 

இந்த படத்தில் முதலில் விஜய்யை தான் நடிக்க கேட்டார்களாம். சில மாதங்கள் காத்திருங்கள் இப்போதைக்கு விஜய்யால் நடிக்க முடியாது என பதில் வரவே தயாரிப்பாளர் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜித்துடன் இணைந்து இப்படத்தை உருவாக்கினாராம்.
Blogger இயக்குவது.