"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..!


நடிகர் விஜய்யின் போக்கிரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த போது விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று நெப்போலியன் சமியத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரையும் நேரடியாக பேட்டி காணுவது இயலாத காரியமாக உள்ளது. இதனால், முன்னணி செய்தி நிறுவனங்கள் காணொளி கூடல் மூலம் பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் நெப்போலியனுடன் பிரபல ஊடகம் ஒன்று காணொளி மூலம் பேட்டி கண்டது. அதில், பல சுவாரஸ்யமாக விஷயங்களை பேசிய நெப்போலியன் போக்கிரி படத்தின் போது விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி முதன் முறையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, போக்கிரி படத்தில் பிரபுதேவா-விற்காக தான் நடித்தேன். அந்த படத்தில் நடிக்கும் போது விஜய் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை.

அதன் பிறகு வெளியான, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை. தெலுங்கில், மகேஷ் பாபு பண்ணிய ரோலை விஜய் பண்ணியிருந்தார். இப்போதும், நல்ல கடினமாக உழைக்கிறார். அதனால் தான் அவருக்கு இப்படியான வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

அப்படி, அவர்களுக்கு என்ன தான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள செய்தியை படியுங்கள் :


தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திடுங்கள்.
Blogger இயக்குவது.