அஜித்தின் கெட்ட பழக்கத்தல் ராஜா படப்பிடிப்பில் அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட சண்டை - 18 வருட வரலாறு..!


‛நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். அஜித்தின் 60வது படமாக உருவாக இருக்கும் அப்படத்திற்கு ‛வலிமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அஜித் தவிர இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனாலேயே பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. முதலில் இப்படத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அதனை அவர் தனது சமூகவலைதளப் பக்கம் மூலம் மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது ‛வலிமை' படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ‛ராஜா' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அப்போது அஜித், வடிவேலு இடையே ஏதோ கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். அதோடு, ‛இம்சை அரசன்' பட விவகாரம் தொடர்பாக வடிவேலு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார்.

கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‛மெர்சல்' படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்திருந்தார். அடுத்ததாக கமலின் ‛தலைவன் இருக்கிறான்' படத்தில் அவர் நடிப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. தற்போது அவர் ‛வலிமை' படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் இது உண்மையா இல்லையா என்பது தெரிய வரும்.

அஜித் படங்களை உற்றுநோக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். "ராஜா" படத்திற்கு பிறகு அஜித் படத்தின் வடிவேலு இணைந்து நடித்ததே இல்லையே என்ற விஷயம். ஆம், ராஜா படத்தில் அஜித்திற்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் தொடர்ந்து அஜித் படங்களில் வடிவேலு நடிக்காமல் போனதற்கு காரணம்.

என்னது, வடிவேலு, தல கிட்ட பிரச்சனை பண்ணினாரா..? என்று உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை. ராஜா படத்தில் அஜித்திற்கு மாமா-வாக நடித்திருப்பார் நடிகர் வடிவேலு. அவருடைய கதாபாத்திரத்தின் படி நடிகர் வடிவேலு அஜித் உட்பட அனைவரையும் வாடா போடா என்று அழைப்பது போல தான் உருவாக்கியிருந்தார் இயக்குனர் எழில்.

அஜித்தின் கெட்ட பழக்கம் :


அஜித்தின் பல நல்ல பழக்கங்களை கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால், அவரிடம் பலரும் கேள்விப்படாத ஒரு கெட்ட பழக்கம் ஒன்று உள்ளது. அது, நான் எப்படி எல்லோருக்கும் மரியாதை கொடுக்கிறேனோ..? அதே போல என்னிடமும் எல்லோரும் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் அஜித்தின் கெட்ட பழக்கம்.

ஆயிரத்தெட்டு விஷயம் இருந்தாலும் தன்னை மரியாதை குறைவாகவோ, ஊதாசின படுத்துவது போல பேசிவிட்டால் அஜித்திற்கு வரும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

படத்தில் கூட அஜித்தை வாடா போடா என்று அழைக்கும் வசனங்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும், அடுத்த நொடியே கூறியவரை அடித்து துவம்சம் செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். இப்படிப்பட்ட கோபத்திற்கு சொந்தக்காரரான அஜித் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட், குழந்தை நட்சத்திரங்களை கூட வாங்க போங்க என்று தான் அழைப்பார்.

தவறியும் வாடா , போடா, வா, போ என ஒருமையில் அழைத்துவிட மாட்டார். இப்படி குணாதியம் உள்ளவர் தல அஜித். நடிகர் வடிவேலு, வயதில் பெரியவர் தான், படத்தில் தான் வாடா போடா என அழைக்கிறார் என்றாலும் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை அறிந்த இயக்குனர் வடிவேலுவிடம் கூறி, அஜித்தை மட்டும் வாங்க மாப்ள, போங்க மாப்ள என்று கூப்பிடுவது போல நடிக்க சொன்னாராம்.

வடிவேலுவின் மார்கெட் உச்சத்தில் இருந்த நேரம் அது. அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டாராம். பிறகு, படத்தின் எடிட்டிங்கில் தான் அதனை சரி செய்துள்ளார்கள். இப்போதும் படத்தின் பல காட்சிகளில் அதனை நீங்கள் பார்க்க முடியும். இங்கு விழுந்த விரிசல் தான். அன்று முதல் அஜித்-வடிவேலு கூட்டணியே அமைப்பதில்லை.

இன்னொரு விஷயம் சொல்றோம் கேளுங்க..! 1995ல் அஜித்-விஜய் காம்பினேஷனில் உருவான ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் வடிவேலுவும் பல காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால், அந்தப்படத்தில் இருவரும் சேர்ந்து வரும் காட்சி ஒன்றுகூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Powered by Blogger.