நிஜமாவே உங்களுக்கு 50 வயசா..? - குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


நம்ம 90ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்துள்ளார்.

தமிழில் ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இதில் பிரபுவுடன் நடித்த சின்னதம்பி படம் இவருக்கான ரசிகர் பட்டாளத்தை பல மடங்கு உயர்த்தியது.

90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும் அல்ல என்றும் கனவுகன்னி இவர் தான். சிங்கார வேலன் படத்தில் இடம் பெற்ற இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்ற பாடலில் கவர்ச்சி காட்டை கட்டவிழ்த்து விட்டுருப்பார் குஷ்பு.

அறிமுகமான காலத்திலேயே பிகினி உடை வரை கவர்ச்சியில் தாராளம் காட்டியவர் குஷ்பு. இவரது, சூடான வீடியோக்கள் இன்றும் யூ-ட்யூப்பில் லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளுகின்றன. அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளி அள்ளி கொடுத்தவர் நடிகை குஷ்பு.

குஷ்பு இட்லி முதல் குஷ்புவிற்கு கோவில் வரை அவரின் புகழ் வேற லெவல். ஏன்னா? குஷ்பு அவ்ளோ அழகு சார்!! என்று சொல்லும் ஆண்களும் பெண்களும் ஏராளம்.

இந்த ஊரடங்கு நேரத்தில் அனைத்து ப்யூட்டி ஃபார்லர்கள் மூடி இருக்கும் வேலையில், பெண்கள் தங்களை அழகுப் படுத்திக்கொள்ள என்ன செய்வது என குழம்பி கொண்டிருக்கும் நேரத்தில், குஷ்பு ஒரு சூப்பர் ஐடியா மற்றும் பாரம்பரிய டிப்ஸ் கொடுத்து வருகிறார்.


உடல் எடை கணிசமாக குறைத்துள்ள அவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Blogger இயக்குவது.