சிறு வயதிலேயே பெண் வேடம் போட்ட நடிகர் விஜய்..! - தீயாய் பரவும் இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்..!


தளபதி விஜய் நடிகர் என்பதையும் தாண்டி நன்றாக பாட கூடியவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அவருடைய அம்மா ஷோபனா ஒரு பாடகி என்பதால், அவரின் சங்கீத களையும் இவருக்கு உள்ளது.

இவர் பல பாடல்கள் பாடி இருந்தாலும் மாஸ்டர் படத்தில் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவருடைய அம்மா ஷோபனாவே, மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

தான் நடிக்கும் படங்களை தவிர, இவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்த போது , மற்ற சில நடிகர்களின் படங்களுக்கும் பாடியுள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் குட்டி ஸ்டோரி என்ற பாடலை பாடியுள்ளார்.

லாக்டவுன் காரணமாக நடிகர் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையே யாரும் இதுவரை பார்த்திடாத விஜய்யின் சின்ன வயசு புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சின்ன வயதில் நெற்றில் பொட்டு, கையில் வளையல் அணிந்து புடவையில் செம்ம அழகாக இருக்கும் விஜய்யின் புகைப்படம் தான் அது. லைட் மேக்கப்புடன் கொஞ்சம் வெட்கத்துடன் தளபதி விஜய் மேடையில் நிற்பது போன்ற இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

Blogger இயக்குவது.