"உங்களுக்கு இன்னும் வயசாகல.." - இறுக்கமான ஜிம் உடையில் நடிகை சினேகா வெளியிட்ட வீடியோ..! - உருகும் ரசிகர்கள்..!


பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான சினேகா, ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடல் மூலம் மேலும் வளர்ந்து தனக்கென தனி பெயரை பெற்றார்.

ஏராளமான புதுமுக நடிகைகள் வரவால் குடும்பப்பாங்கினியாக இழுத்துப் போத்திக்கொண்டு நடித்து வந்த சினேகாவுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. புதுமுக நடிகைகளின் கவர்ச்சி புயலை சமாளிக்க, தானும் கிளாமராக நடிக்க ஆரம்பித்தார் சினேகா.

தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியில் தாராளம் காட்டினார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளது.

தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். குடும்பம் , குழந்தை என செட்டிலாகி விட்ட சினேகா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து படங்களில் நடிக்க இருக்கும் சினேகா தன்னுடைய உடல் எடை ஏறி விடாமல் இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இன்னும் வயசாகல என்று உருகி வருகிறார்கள்.


Blogger இயக்குவது.