அம்மாவானார் நடிகை காயத்ரி ரகுராம்..! - இதோ அவருடைய குழந்தை..!



ஆம், தன்னுடைய இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள "யாதுமாகி நின்றாய்" படத்தை தான் ஒரு இயக்குனராக என்னுடைய முதல் குழந்தை என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.

மறைந்த பிரபல நடன இயக்குநரான ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர் சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையை யாதுமாகி நின்றாய் படத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். 

இதில் அவரே நடித்தும் உள்ளார் .இத்திரைப்படத்துக்கு அஸ்வின் வினாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் யாதுமாகி நின்றாய் திரைப்படம் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடனமாடும் பெண்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதை முடிந்தவரை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் காயத்ரி.

அவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது, காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார். அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள ஆகாயம் தாயாக... பாடல் உருக வைக்கிறது.


மற்ற பாடல்களும் கேட்கும்படி உள்ளன. அச்சுவின் பின்னணி இசையும் காட்சிகளுடன் ஒன்றிப் போய் உள்ளது. வாழ்க்கையில் தடுமாறி, தடம் மாறிப் போன ஒரு பெண்ணின் கதையை அங்கங்கே தடுமாற்றத்துடனும் சில இடங்களில் தடம் பதிக்கும் விதத்திலும் கொடுத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.
Blogger இயக்குவது.