வனிதா மூன்றாவது திருமணம் குறித்து அவரது மூத்த மகள் என்ன கூறியுள்ளார் பாருங்க...! - வைரலாகும் பதிவு..!


பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகள், அருண்விஜய்யின் சகோதரி என அறிமுகமாகியிருந்த வனிதாவுக்கு, பிக்பாஸ் தனி அடையாளத்தை கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர் இல்லை என்றால் பிக்பாஸே இல்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் வெறுத்துவிட்டனர்.

இதை அறிந்த பிக்பாஸ் திரும்பவும் வனிதாவை உள்ளே கொண்டு வந்து கேமை திருப்பினார். டிஆர்பியில் உச்சம் தொட்டது அந்த நிகழ்ச்சி. இந்நிலையில், அதே தொலைக்காட்சியில் வேறொரு நிகழ்ச்சி மூலம் நடுவராக அவதாரம் எடுத்தார் வனிதா. மேலும், பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் பங்குபெற்றார்.

அப்போதெல்லாம் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு நிறையவே இருந்தது. இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அவரது புகைப்படம் மற்றும் திருமண பத்திரிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

இவர்களது திருமணம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது "அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.''

இந்நிலையில், வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா அவருடைய மூன்றாம் திருமணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது, நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பேன். நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். உங்களுடன் இருக்கும் 15 ஆண்டுகளும் தீரம்மிக்கது.

வாழ்க்கையில் பலவற்றை சேர்ந்து பார்த்திருக்கிறோம்.இன்னும் பல ஆண்டுகள் போன்றுதான் வர போகிறது என்பது எனக்கு தெரியும். உங்களை எனக்கு தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் அன்பான மனிதர்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும், அதில் எந்த தவறும் இல்லை.ஐ லவ் யூ, நான் 10000% உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் என்ன பேசினாலும் பரவாயில்லை, ஏனெனில் எனக்கு உங்களைப்பற்றி தெரியும். நீங்கள் ஒரு கடின உழைப்பாளி, நேர்மையானவர், அருமையானவர், உற்சாகப்படுத்தக்கூடியவர், இரக்கமானவர், அன்பானவர்.. அதை மறந்துவிடாதீர்கள்.

அனைவரையும் போல நீங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தகுதியுள்ளவர். எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் மேஜிக்கில் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் காதலிலும் நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இருந்தது, அதற்கான பலன் கிடைத்துள்ளது.

இதை உங்களின் மகளாகவும் தோழியாகவும் சொல்கிறேன். ஐ லவ் யூ... ஆல் த பெஸ்ட் மா..என்று தனது அம்மாவிற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் அவரது மகள்.
Blogger இயக்குவது.