முன்னணி நடிகர் படத்தில் முதன் முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கும் வடிவேலு..! - யார் படம் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் வடிவேலு. இவர் முழு நேர நடிகராக வேலை செய்து கிட்ட தட்ட பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும், அந்த வெற்றிடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை.
இவர் படங்களில் நடிக்க வில்லை என்றால் மீம்கள் மூலம் நடித்துக்கொண்டே தான் இருக்கிறார். அது தான் வடிவேலுவை இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதே உயிர்ப்புடன் வைத்துள்ளது என்றும் கூறலாம்.
மீம் என்றால் அது தலைவன் வடிவேலு தான் என்ற நிலை தான் நிலவுகிறது. இவருடைய இந்த சினிமா ப்ரேக்கிற்கு காரணம் அவர் பிரபல அரசியல் கட்சிக்கு செய்த அரசியல் பிரச்சாரம் அவரின் திரை வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையானது.
அதை தொடர்ந்து நீண்ட வருடம் கழித்து ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அதுவும் பெரிதும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. தற்போது வடிவேலு ஒரு சில பிரச்சனைகளால் படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்தது.
அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில், மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தில் வடிவேலு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்க்காக வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் ஒகே சொன்னால் அடுத்த படத்தில் வில்லனாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.