அட்ரா சக்க..! - அன்றே, வனிதா திருமணத்தை கணித்த தீர்க்கதரிசி சூர்யா..! - வைரலாகும் புகைப்படம்..!


எப்படி, அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் யாராவது மறைந்து விட்டால் அவர்கள் நம்ம வைகோ அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருகிரார்களா..? என்று தேடுவதற்கு ஒரு கூட்டம் உள்ளதோ, அதே போல நாட்டில் கவனிக்கப்படும் படி என்ன சம்பவம் நடந்தாலும் நடிகர் சூர்யா அப்படியான பிரச்சனை வருவது போல காட்சிகளில் நடித்துள்ளாரா..? என்று தேடுவதற்கு பெரிய கூட்டம் ஒன்று ஆன்லைனில் வலம் வந்து கொண்டிருகின்றது.

சூர்யா ஒரு இலுமிநாட்டி.. என்பதில் ஆரம்பித்து, சூர்யா ஒரு தீர்கதரிசி.. சூர்யா ஒரு நாஸ்ட்ரடாமஸ்.. சூர்யா ஒரு ஜோதிட நிபுணர்,... சூர்யா ஒரு குறிசொல்லும் கோடாங்கி என்பது வரை அடித்து துவைத்து கொண்டிருகிறார்கள்.

இதுக்கெல்லாம் காரணம், அவர் நடித்த ஏழாம் அறிவு படமும், காப்பான் படமும் தான், இந்த இரண்டு படத்தில் வரும் காட்சிகளும் நிஜத்திலேயே நடந்து விட்டன. ஒன்று கொரோனா.. இன்னொன்று வெட்டுகிழி படையெடுப்பு. இதனால், சூர்யா படங்களை இனிமேல் பார்க்கும் போதெல்லாம் அந்த படத்தில் வரும் பிரச்சனை இன்னும் எத்தனை நாளில் நடக்கப்போகுதோ என்ற ஒரு வித பதட்டத்துடன் தான் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.

இது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். எளிதில், கடந்து செல்ல கூடிய விஷயம் கிடையாது. ஆனால், இந்த விஷயத்தை வைத்து காமெடி மீம்களையும் நம்ம நெட்டிசன்கள் பறக்க விட்டு வருகிறார்கள். அதனை, சமூக வலைதளங்களில் நீங்களும் பார்த்திருக்கலாம்.

இப்போது, உச்ச கட்டமாக பிக்பாஸ் வனிதாவின் திருமணத்தையும் கணித்தவர் தீர்க்கதரிசி சூர்யா என்று சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மாசு என்கிற மாசிலாமணி என்ற படத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய பெண் குழந்தைக்கு முன்பு  நடிகை பிராணிதா-வை கரம் பிடிப்பார்.


அந்த காட்சியை எடுத்துக்கொண்டு, பெண் குழந்தைகள் முன்பு திருமணம் நடக்கும் என்பதை அன்றே கணித்தார் சூர்யா என்று இணையத்தில் ரகளை செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Blogger இயக்குவது.