அடேங்கப்பா..! - உலகிலேயே அதிக விலை கொண்ட பொருள் - பிரியங்கா சோப்ராவின் கணவர் கையில்..!
நடிகர் விஜய்க்கு ஜோடியாக "தமிழன்" என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அந்நாட்டு பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் இணைந்து அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி வீட்டை ரூ 144 கோடிக்கு வாங்கினர்.
பிரம்மாண்டான இந்த சொகுசு பங்களாவில் சினிமா தியேட்டர், உடற் பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம், 11 குளியல் அறைகள், 7 படுக்கை அறைகள், பார் என பல வசதிகள் இருக்கின்றன.
பின் ரூ 3 கோடிக்கு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். சில நாட்களுக்கு முன் அவர் விருது விழாவில் கணவருடன் கலந்து கொண்டார். அப்போது நிக் அணிந்திருந்த கைக்கடிகாரம் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.
இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ 7.56 கோடியாம். உலகிலேயே அதிக விலை கொண்ட கைக்கடிகாரம் இது தான். கடிகாரம் முழுதும் நிறைய வைர கற்கள் இதில் பதிக்கபட்டுள்ளது.