"இது போட்டோ இல்ல.. என் உசுரு டா.." - பிகில் அம்ரிதா வெளியிட்ட புகைப்படம் - உருகி கருகும் ரசிகர்கள்..! - வைரல் மீம்கள்..!
பிகில் படத்தின் மூலம் தென்றல் என்ற கேரக்டரில் நடித்தவர் அமிர்தா ஐயர். இந்தப் படத்தில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளார்.
படை வீரன் என்ற படத்தில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெறி படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருப்பார். விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
தெத்துப்பல் அழகு என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிர்தா அவ்வப்போது இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். பிக்பாஸ் புகழ் கவின் உடன் சேர்ந்து லிப்ட் எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வைரலானது.
கவர்ச்சி நடிகைகளுக்கு எந்த அளவுக்கு டிமான்ட் இருக்கிறதோ, அந்த அளவுக்கு குடும்பப்பாங்கான பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருக்கும் நடிகைகளுக்கும் டிமான்ட் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இதில், அம்ரிதா இரண்டாவது ரகம். தன்னுடைய இயற்கையான அழகால் கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் அம்மணி இப்போதும் சில க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீம்களை பறக்க விட்டு சிலாகித்து வருகிறார்கள்.