1975-ல் "Mr.Madras" பட்டம் வென்ற சரத்குமாரின் அப்போதைய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..?
நடிகர் சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும்
தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார்.
தமிழ் திரைப்பட
உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் ஹீரோவாக நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.
அரசியல் இயக்கங்களில்
பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும்
அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர், எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா
தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954 சூலை 14 அன்று பிறந்தார்.
கணிதத்தில்
இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். இக்காலத்தில்
சென்னை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத்குமார், திரைத்துறைக்கு
வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து, மணம் புரிந்தார்.
இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு
நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் - சாயாதேவி திருமண வாழ்க்கை
முறிந்தது. சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும்
நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார்.
அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.
தற்போது, விளம்பர படங்கள் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். இவர் அறிமுகமான காலத்தில் இருந்த பல நடிகர்கள் காணமல் போய் விட்ட நிலையில் சினிமாவில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் சரத்குமார்.
கடந்த, 1975ம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர்.மெட்ராஸ் போட்டியில் வெற்றி பெற்றபோது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.