காட்மேனுக்கு வக்காழத்து வாங்கும் பா.ரஞ்சித் அவர்கள் திரௌபதி-க்கு பொங்காதது ஏன்..? - விளாசும் நெட்டிசன்கள்..!


சமீப காலமாக இந்தியாவில் பெரும்பான்மை மதத்தின் மீது வரம்பு மீறிய தாக்குதல்கள் நடக்கின்றன. அப்படியான தாக்குதல்களை தட்டி கேட்பவர்களை மதவாதி என்ற சாயம் பூசி அவர்களின் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தயங்குகின்றன இன்றைய ஊடகங்கள்.

இந்து, முஸ்லீம், கிருத்துவம், புத்தம் என மதம் எதுவாக இருந்தாலும், விமர்சனம், விவாதம் என்பது தேவையற்ற ஒன்று. ஆனால், சமீப காலமாக இந்து மதத்தின் மீது நடந்து வரும் தாக்குதல்களை நம்மால் பார்க்க முடிகின்றது.

தமிழக அரசியல் வாதிகள் சிலரே கோயில்களை பற்றி கேவலான கருத்துகளை கூறுவதை பார்க்க முடிகின்றது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காடாக விளங்கும் கோயில்களை தன்னை ஒரு அரசியல்வாதி என காட்டிக்கொள்ளும் ஒரு நபர் இழிவாக பேசுகிறார்.

அப்போது, தமிழர்கள் என்ன செய்து கொண்டிருந்தோம். கட்சி,மதம் என்ற அடிப்படையில் பிரிந்து நின்று நமக்குள்ளே கருத்து மோதல்களில் ஈடுபட்டோமே தவிர ஒருமித்த குரலாய் அவற்றை எதிர்ப்பதை நம்மால் பார்க்க முடியவில்லை. அந்த இடத்தில் தான் சோ கால்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். அது தான் அவர்களின் அரசியல் சூட்சுமமே.

விஷயத்துக்கு வருவோம், காட்மேன் என்ற வெப் சீரிஸ்ல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடரை ஒளிபரப்ப போவதில்லை என ஜீ5 நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இந்த நிலையில் இந்த தொடருக்கு எதிராக புகார் அளித்தவர்கள் குறித்தும் இந்த தொடரை நிறுத்திய ஜி5 நிறுவனம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் கூறியதாவது, காட்மேன், @ZEE5India தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர்&நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள் இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய @ZEE5India நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல!!!மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க!! என்று Zee 5 நிறுவனத்தை தாக்கி ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்.

பா.ராஞ்சித்தின் இந்த பதிவை பார்த்த பல தரப்பு ரசிகர்களும், இன்று, இந்த காட் மேன் வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றவுடன் பொங்கும் இதே இயக்குனர் பா.ரஞ்சித் தான் சமீபத்தில் "திரௌபதி" படத்தை தடை செய்ய சொல்வது பற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதை பற்றியெல்லாம் நான் பேசமாட்டேன். அது தேவையில்லாத விஷயம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார். ஆனால், இப்போது யாருமே கேட்கும் முன்னர் வந்து காட் மேன் படத்திற்கு வக்காழத்து வாங்குகிறார்.

இதே நிலையில், இதே போன்ற வேறு ஒரு ஒரு வெப் தொடர் இந்து மதத்தை அல்லாமல் வேறு மதத்தை அவமதிக்கும் வகையில் எடுத்திருந்தால் இதேபோல் பா ரஞ்சித் பொங்கி இருப்பாரா..? என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Blogger இயக்குவது.