திருமணமான முதல் நாளே பிரச்சனை - பிக்பாஸ் வனிதாவின் மூன்றாவது கணவரின் முதல் மனைவி போலீசில் புகார்..!


பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் நேற்று(ஜுன் 27) கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். வனிதாவின் இல்லத்தில் இந்த திருமணம் எளிமையாக நடந்தது.

நடிகை அம்பிகா உள்ளிட்ட ஒரு சில திரைப்பிரபலங்களுடன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதில் பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், சட்ட ரீதியாக தனக்கு விவாகரத்து கொடுக்காமலே வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுப்பற்றி வனிதாவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது : எதிர்பார்த்த ஒன்று தான். 8 ஆண்டுகளுக்கு முன்னரே பீட்டர் அவரை பிரிந்து வந்துவிட்டார். நாங்கள் திருமணம் செய்வது அவருக்கு தெரியும்.

வேண்டுமென்றே பணம் பறிக்கவே இது போன்று புகார் கொடுத்துள்ளார். ரூ.1 கோடி பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார். பீட்டர் பால் ரொம்ப அன்பானவர்.

சுறுசுறுப்பின் சிகரம். வெற்றி, புகழ் வரும்போது பிரச்னைகள் வரும். சினிமாவில் இருக்கும் நான் ஏற்கனவே இதுபோன்று நிறைய பார்த்துவிட்டேன். இது எங்கள் வாழ்வை பாதிக்காது. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்கிறார்.
Blogger இயக்குவது.