அப்பாடா..! - இப்போதாவது ஒரு முடிவுக்கு வந்தாரே..! - சியான் விக்ரம் அதிரடி முடிவு..! - மாஸ் அப்டேட்..!


நடிகர் விக்ரம் "சேது" படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பலரும், சேது தான் விக்ரமின் முதல் படம் என்று நினைத்து கொண்டிருகிறார்கள். ஆனால், அதற்கு முன்பே தமிழ், மலையாளம், தெலுங்கு என 24 படங்களில் நடித்தவர் விக்ரம்.

சேது அவரது 25வது படம். ஒரு நடிகன் இப்படியெல்லாமா இருப்பான்.. என்று கேட்கும் அளவுக்கு அர்பணிப்புடன் வேலை செய்பவர் விக்ரம். சமீபத்தில், ஐ படத்தில் நடிக்க உடல் எடையில் மூன்று பங்கு குறைத்து அதிர வைத்தார்.

என்ன பண்றது..? டெடிகேஷன்.. கடின உழைப்பு எல்லாமே இருக்கு.. ஆனால், படம் ஒன்னும் வொர்க் அவுட் ஆக மாட்டேங்குதே என்ற ஏக்கம் அவரது ரசிகர்கள் மத்தியில் பொதுவாக உள்ளது.

ஆம், விக்ரமின் படங்களுக்கு சொல்லிக்கொள்ளும் படி ஒப்பனிங் இருந்தாலும், படத்தின் திரைக்கதையில் கோட்டை விடும் ராகமாகவே அனேக படங்கள் அமைந்தன. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி ஹிட் அடித்த படம் என்றால் 2011-ம் ஆண்டு வெளியான தெய்வதிருமகள் தான்.

நடிப்பு அரக்கனான விக்ரமின் நடிப்பு பசிக்கு செம்ம தீனி போட்ட படம். எமோஷனலான படம், காமெடி கலந்து கொடுத்திருந்தா இயக்குனர் விஜய். படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

அதன் பிறகு, 2015-ம் ஆண்டு வெளியான "ஐ" படத்தை கூறலாம். ஆனால், விமர்சன ரீதியாக இந்த படம் கலவையான விமர்சங்கலையே பெற்றது. அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே சுமார், சுமாரோ சுமார் ரகம் தான். +

அஜித், விஜய், ரஜினி எல்லாம் இன்றைய இளம் இயக்குனர்களுடன் கை கோர்த்து பட்டாஸ் கிளப்பி கொண்டிருக்கும் போது இவரு மட்டும் ஏன் இப்படி பழைய வண்டியை ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இப்போது, ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டார் விக்ரம். இளம் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதுவும், அவரது மகனுடன் சேர்ந்து. மாஸ்..!

தனுஷ் நடித்து வரும், ஜகமே தந்திரம் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் 60-வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்புடன் கையில் துப்பாக்கியுடன் உள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ளார். கொரோனா லாக்டவுன் முடிந்ததும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தை 2021-ம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விக்ரம், துருவ் விக்ரமுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Chiyaan_Mania_Starts
Powered by Blogger.