பிரமாண்ட நாற்காழியில் தொடைகவர்ச்சி காட்டும் நடிகை சோனியா அகர்வால்..! - கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


நடிகை சோனியா அகர்வால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மாடல் அழகியாக வலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட் பட வாய்ப்புகளை தேடி சென்ற போது முகத்தின் அமைப்பை காரணம் காட்டி வாய்ப்பு தர மறுத்துள்ளனர்.

ஆனால், தமிழில் செல்வராகவன் முதன்முதலாக டைரக்டு செய்த ’காதல் கொண்டேன்’ படத்தில், அவர் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ’7 ஜி ரெயின்போ காலனி,’ ’மதுர,’ ’கோவில்,’ ’ஒரு கல்லூரியின் கதை’ உள்பட பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார்.

டைரக்டர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் விவாகரத்தும் செய்தார். சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்தார்.

தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகளை எதிர்பார்த்து வந்த அவருக்கு அந்த வாய்ப்புகள் வராததால் ஏமாற்றம் அடைந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்த ’பாலக்காட்டு மாதவன்’ படத்தில், சோனியா அகர்வாலுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்துக்கு பிறகும் கதாநாயகி வாய்ப்புகள் அமையாததால், கதாநாயகியாகத்தான் நடிப்பது என்ற அவருடைய முடிவை மாற்றினார். இனிமேல் கவர்ச்சி நடனம் ஆடுவது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார். முதன்முதலாக அவர், ’ஜம்னா ப்யாரி’ என்ற மலையாள படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.

மலையாள பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான குஞ்சாகோ போபனுடன் இணைந்து அந்த பாடல் காட்சியில், சோனியா அகர்வால் கவர்ச்சி நடனம் ஆடினார். தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ’டான்ஸ்’ ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட சர்ச்சையை கிளப்பிய "காட் மேன்" என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரில் நடித்ததற்காக அவரை கண்டபடி விளாசினர் ரசிகர்கள். இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


மூன்று சிங்கங்கள் கொண்ட பிராமாண்ட நார்கழியில் தன்னுடைய தொடை மற்றும் அதில் குத்தியுள்ள டாட்டூ தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இது தான்.
Blogger இயக்குவது.