பென்குயின் - படம் எப்படி இருக்கு..? - திரைவிமர்சனம்..!


தமிழ் சினிமா மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு வந்துக்கொண்டு இருக்கின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இதனுடைய வேகம் அதிகரித்துள்ளது.

தமிழ் படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து மாபெரும் வெற்றிகை பெற தற்போது பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது.

ரசிகர்களின் பலத்தை எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் எப்படி இருகின்றது  என்பதை இங்கே பார்ப்போம்.

படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஸிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது.ஒரு கட்டத்தில் அவருடைய குழந்தை காணமல் போகிறது, இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் கீர்த்தி தன் மகனை தேடி அழைகிறார். மகன் காணாமல் போனாதால் புலம்பியபடியே இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

எப்போதும் மகன் நினைவாகவே பித்து பிடித்தவர் போல ஆகிவிடுகிறார் கீர்த்தி. இப்படியே இருந்தால் எப்படி வாழ்க்கைய நடத்துவது. நீ நார்மலாக இருந்தால் தான் என்னால் நார்மலாக இருக்க முடியும் என கணவர் சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் நீ மகனையே நினைத்துக்கொண்டு இருகிறாய். வீட்டில் நிம்மதியே இல்லை. நானும் நிம்மதியாய் இல்லை. நாம் பிரிந்து விடுவோம் என மனைவியை பிரிந்து விடுகிறார் கீர்த்தி சுரேஷின் கணவர்.

நான்கு ஆண்டுகள் ஆகியும் மகனை தேடுவதை நிறுத்தாத கீர்த்தி சுரேஷை தொடர்ந்து கண்காணித்து வந்த ஒரு இளைஞர் கீர்த்தி சுரேஷிற்கு உதவியாய் இருப்பேன் என்றும், உங்கள் மகனை தேட நானும் உதவி செய்வேன் என்று கூறி அவரது மனதை சரி செய்துக்கொண்டு இரண்டம் திருமணம் செய்துக்கொள்கிறார்.

இரண்டாவது திருமணம் முடிந்த பிறகு அவருடைய மகன் கிடைத்துவிடுகிறார், இத்தனை நாட்கள் குழந்தையை கடத்தி வைத்திருந்தது யார்? அதை தொடர்ந்து என்னென்ன நடக்கிறது என்ற சஸ்பென்ஸ் தான் இந்த பென்குயின்.

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகத்திற்கு பிறகு வரும் ஹீரோயின் சென்ட்ரிக் படம். அதனாலேயே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது, எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றப்படியே கீர்த்தி மிரட்டியுள்ளார். அதோடு படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்துள்ளனர், படத்திற்காக தேர்ந்தெடுத்த லொக்கேஷன் தான், திகில் காட்சிகளுக்கு மேலும் திகிலை ஏற்படுத்துகிறது.

அதிலும் கீர்த்தி சொல்லும் கதைகளுக்கு ஏற்றது போலவே படத்தின் காட்சிகளும் நகர்வது சுவாரஸ்யம். ஆனால், படம் கொஞ்சம் ராட்சசன் சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதோடு, படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல் காட்சிகளை கவனித்திருக்கலாம்.

அதே நேரத்தில் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் அதிலும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியுள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும் இரவின் அசத்தை கடத்துகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பு, படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக உள்ளன. படம் பார்க்கும் போது கொஞ்சம் ராட்சசன் சாயல். அவ்வப்போது, மிஷ்கினின் சைக்கோ படமும் நினைவில் வந்து போகின்றது.

சில லாஜிக் மீரல்கள், கடைசி அரை மணி நேரம் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். திரில்லர் ஜானர் படங்களை விரும்புபவர்களை இந்த பெண்'குயின் ஏமாற்றாது.

அம்மா மற்றும் அம்மாவின் அன்பு, அம்மாவின் பாசம் அனைத்தையும் ஒன்று சேர்ந்த கலவை தான் "பென்குயின்".
Blogger இயக்குவது.