"என்ன தயா இதெல்லாம்...." - வைரலாகும் நயன்தாராவின் வீடியோ - கண்ணை கசக்கி விட்டு பார்க்கும் ரசிகர்கள்..!


நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாகவே வசிக்கிறார்கள். சிலர் அவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சிலர் இன்னும் நடக்கவில்லை என்றும் சொல்லி வருகிறார்கள்.

நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளிவந்தால் அவருடைய மார்க்கெட் நிலவரம் பாதிக்கப்படும், அதனாலேயே அவர் அதை வெளியில் சொல்லாமல் மறைக்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு. நேற்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரோனா என செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் தங்களுக்கு கொரோனா இல்லை என விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கொரானோ காதல் என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஏதோ ஒரு மொபைல் ஆப்பின் மூலம் தங்கள் இருவரையும் சிறுமி, சிறுவனாக மாற்றிக் கொண்டு ஜாலியாக நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “அனைத்து ஊடகங்கள், சோஷியல் மீடியா நண்பர்கள் ஆகியோரது கொரோனா பற்றிய கற்பனையை, செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்க்கிறோம். எங்கள் நலம் விரும்பிகளுக்கு, நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். உங்களைப் போன்ற ஜோக்கர்களுக்கும், உங்களின் ஜோக்குகளைப் பார்ப்பதற்கும், கடவுள் எங்களுக்கு தேவையான தைரியம், மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் கொரோனா என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து சென்னையில் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் பரபரப்பு ஏற்பட்டது எனவும் அங்கு வசிப்பவர்களை தனிமை படுத்தியுள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

Powered by Blogger.