சுஷாந்த் தற்கொலைக்கான உண்மையான காரணம் இது தான் - பிரபலங்களை கிழி கிழி என கிழிக்கும் ஜெயம் ரவி பட நடிகை..!


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்து வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பலர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

ஓட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் குறிப்பிட்ட சிலரின் குடும்பத்தின் கைகளில் சிக்கி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர், தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பற்றி சிலர் புதுபுதுக் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சுஷாந்துக்கு திடமான மனம் இல்லை என்கிறார்கள். அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர் சுஷாந்த். அவர் என்ஜினியரிங் நுழைவுத் தேர்வில் ரேங்க் வாங்கியவர். அவர் எப்படி பலவீனமான மனதை கொண்டிருக்க முடியும். பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.

தனது படங்களை பார்க்கும்படி சுஷாந்த் கெஞ்சிக் கேட்டிருக்கிறார். எனக்கு காட்ஃபாதர் யாரும் இல்லை. அதனால் தயவு செய்து என் படங்களை பாருங்கள். இல்லை என்றால் என்னை இங்கிருந்து அனுப்பி விடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? எம்.எஸ்.தோனி, கேதர்நாத் முதல் அவர் கடைசியாக நடித்த சிச்சோரே வரை அவரது படங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சி

ச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்? என்னுடைய படங்களுக்கும் இதேநிலை தான். நான் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகியும் பிளாப் என்கிறார்கள். என்னுடைய படைப்புகளை ஆதரிக்க மறுப்பது ஏன்? ", என கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி, பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்று தான் பாலிவுட் சினிமா உள்ளது. எந்த படம், யாருடைய படம் வெற்றி பெற வேண்டும். யாருடைய படத்தை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட சிலர் தான் முடிவு செய்கிறார்கள் என்றால் அது எப்படி நல்ல திறமையானவர்களுக்கு வழி விடும்.

ஒன்றுக்கும் உதவாத குப்பை படங்கள் எல்லாம் விருதை பெறுகின்றன. உழைத்தவர்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் கங்கனா ரனவத்.
Blogger இயக்குவது.