"எதிர்க்க எதிர்க்க எழுந்து நிற்பான்.." - பிரபலங்கள் வாழ்த்து மழையில் தளபதி - யார், யார்..? என்ன சொல்லியிருக்காங்க..! - வாங்க பாக்கலாம்..!


தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இளைய தளபதியில் இருந்து தளபதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென்மாநிலம் முழுவதுமே தளபதி விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இன்று (ஜூன் 22ம் தேதி)  விஜய்யின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில்  ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். முன்னதாக, நடிகர் விஜய்,  கொரோனா நேரத்தில் மக்கள் அனைவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதால், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர் மன்றங்களுக்கு அன்பு கட்டளை போட்டிருந்தார்.

அதே சமயத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் சற்றே அப்செட்டான தளபதி வெறியன்ஸ், சோசியல் மீடியாவிலாவது வேற லெவலுக்கு கொண்டாட வேண்டுமென முடிவு செய்து கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில், சினிமா பிரபலங்களும் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அப்படி, யார் யார்..? என்ன வாழ்த்து கூறியுள்ளனர் என்று பார்க்கலாம் வாங்க..!
Blogger இயக்குவது.