அட்லி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..! - தளபதி விஜய்க்கு எழுதிய கதையாம்..!


அட்லி என்றால் ஹிட் பட இயக்குனர் என்ற பெயருடன் காப்பி கேட் இயக்குனர் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. ஒரு படத்தை காப்பி அடிக்காமல் மூன்று அல்லது நான்கு படங்களின் கதையை எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு புது படமாக கொடுப்பதில் ஜித்து ஜில்லாடி நம்ம அட்லி.

மெர்சல் படம் வெளியடைந்த பிறகு அந்த படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மாடர்ன் வெர்ஷன் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இப்படியான நிலையில், நடிகர் விஜயும், அட்லயும் கமல்ஹாசனை சந்திக்க சென்ற போது நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார்.

அப்போது, பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை ஒட்டி வைத்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் அந்த போஸ்டர் குறித்து கேட்ட போது, பொதுவாக நான் நடித்த படங்களில் போஸ்டர்கள் எனது அலுவலகத்தில் இருக்கும். எதேர்ச்சையாக பல போஸ்டர்கள் இருக்கும். ஆனால், அந்த அபூர்வ சகோதர்கள் போஸ்டர் எதேர்ச்சையானது அல்ல என்று தனக்கே உரிய பாணியில் ஒரு குத்து குத்தினார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு உதவியாளராக பணியாற்றி அதன்பின் இயக்குனராக களம் இறங்கியவர் அட்லி. அவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி மிகப் பெரிய ஹிட்டானது. அதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அட்லீக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யுடன் அவர் பணியாற்றினார். தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றன. பிகில் படம் சென்ற வருடம் வெளியான நிலையில் அதற்கு பிறகு எந்த புது படத்தையும் அறிவிக்காமல் இருக்கிறார் அட்லி.

அட்லியின் ஐந்தாவது படம் :


தனது ஐந்தாவது படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாக அப்போது கூறப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவராமல் இருக்கிறது.

அவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் கூட்டணி சேர்கிறார் என கூறப்பட்டாலும், அது இன்னும் துவங்கிய பாடில்லை. இந்நிலையில் தற்போது அட்லி ஜெயம் ரவியுடன் கூட்டணி சேருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லி இந்த படத்தை இயக்கப் போவது இல்லை, தயாரிக்க மட்டுமே செய்கிறார். அட்லியின் உதவியாளர் ஒருவர் தான் இந்த படத்தினை இயக்குகிறார். அதில் ஹீரோவாக ஜெயம் ரவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை விஜய்க்கு எழுதியது என்று கூறுகிறார்கள்.

நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படமான பூமி படத்தில் நடித்து முடித்துள்ளார். லக்ஷ்மன் இயக்கியுள்ள இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதன் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி மணிரத்னம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்திலும் ஒரு முக்கிய ரோலில் ஜெயம் ரவி நடிக்கிறார். அதற்காக பல்வேறு பயிற்சிகளை அவர் எடுத்துக் கொண்டார். அந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அதற்குப் பிறகு இந்திய வில் பல இடங்களில் சூட்டிங் நடந்தது.

மேலும் பல இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் கொரோனா லாக் டவுன் என்பதால் சினிமா சூட்டிங்கிற்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காமல் உள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Blogger இயக்குவது.