"கைதி" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!


மாநகரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் ஜனரஞ்சக சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவார்ந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த கைதி திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகி இல்லை. பாடல்கள் இல்லை. கதையையும், கதையின் நாயகனை மட்டுமே நம்பி வெளியானது இந்த படம். இந்த திரைபடத்தின் இசை சாம் CS, ஒளிப்பதிவு சத்யன் சூரியன், படத்தொகுப்பு பிலோமின் ராஜ் ஆவர்கள்.

கைதி திரைப்படத்தை டிரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு தயாரித்தது. நடிகர் விஜய்யின் "பிகில்" திரைப்படத்தோடு போட்டி போட்டு வெளியான இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆம், வில்லன் நடிகர் மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் இந்த படத்திற்க்கான கதையை எழுதியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

படத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நடிகர் கார்த்தியை ஹீரோவாக்கியுள்ளார் இயக்குனர்.
Blogger இயக்குவது.