கீர்த்தி சுரேஷ் முதல் காஜல் அகர்வால் வரை தங்க தளபதியின் CDP-யை வெளியிட்ட முன்னணி பிரபலங்கள்..!
நடிகர் விஜய்க்கு வரும் 22 ஆம் தேதி பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை, ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்கள்.
இந்நிலையில் இந்த வருட பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்திருந்தனர். பேனர்கள் வைத்தல், தோரணங்கள் கட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இது பற்றி நடிகர் விஜய்க்கு தகவல் வந்தது.கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி பிறந்த நாளை கொண்டாடினால், கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனால், ரசிகர்கள் யாரும் பிறந்தநாள் கொண்டாடுகிறேன் என்று வெளியில் வந்து கூட்டம் கூட்ட மாட்டார்கள் என்று தெரிகின்றது.
ஆனால், ஆன்லைனில் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்பதால் இப்போதே காமன் dp, ஹேஸ்டேக் ட்ரெண்டிங் என களமாட ஆரம்பித்து விட்டனர் விஜய் ரசிகர்கள்.
இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய்-யை வாழ்த்த பிரபலங்களும் களத்தில் குதித்து விட்டனர். யார்.. யார்.. என்னென்ன சொல்லியிருக்காங்க வாங்க பாக்கலாம்.