சிம்புவுக்கு திருமணம் - இவங்க தான் மணப்பெண் - நடிகர் VTV கணேஷ் வெளியிட்ட தகவல்..!
இயக்குநர் சுந்தர் சி-யின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக் குறைத்தார் சிம்பு. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு கன்னட திரைப்படமான ’மஃப்டி’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிம்பு, இதன் படபிடிப்பை அடுத்த மாதம் துவங்க இருக்கிறார். இதற்கிடையே வரும் ஆகஸ்டில் சிம்புவின் திருமணம் நடக்கவிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அவரது தாய் உஷா. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகர் VTV கணேஷ் சமீபத்தில் பிரபல வலைத்தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் சிம்புவுக்கு விரைவில் திருமணம். சீக்கிரமே அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.