18 வயது பருவமொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை பிரவீனா..! - குவியும் லைக்குகள்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை பிரவீனா.
ஒரு அம்மாவாக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.
பிரியமானவன் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர்.
மேலும் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவார்டு மற்றும் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான கேரளா அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
தமிழில் சீரியல் நடிகையாக இவர் அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும், மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
அந்த வகையில், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும், சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். இப்படி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான இவர் சமூக வலைதலங்களிலும் படு சுட்டி, சமீபத்தில் கூட தனது தோட்டத்தில் புகுந்து பாம்பை பிடித்து அதனை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவரும் 18 வயது பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.