கமலுக்கு முன்பாகவே முதல் கணவருடன் கௌதமி பெற்றெடுத்த அழகிய மகளை பார்த்துள்ளிர்களா ? - இதோ புகைப்படம்..!
கமலுடனான வாழ்க்கைக்கு முன்பாக நடிகை கவுதமி ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றவர். குருசிஷ்யன் படத்துடன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கவுதமி.
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் சினிமாவில் ஜோடியாக நடித்து புகழின் உச்சம் தொட்டவர். கவுதமியின் பூர்வீகம் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டமாகும். இன்ஜினியரிங் படித்தவர்.
இவர் முதலில் கால் வைத்தது ஆந்திர சினிமா துறையில்தான். இந்நிலையில்தான், 1998ல் கவுதமி, சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மறு ஆண்டே இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார்.
ஆனாலும், தம்பதிகள் அதே ஆண்டு அதாவது 1999ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 2005 முதல் கமல் ஹாசனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் கவுதமி. கடைசியாக இவ்விருவரும் ஜோடியாக நடித்த திரைப்படம் பாபநாசம். ஆனால் தொடக்கம் முதலே கவுதமிக்கும், கமல் மகள்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்று கூறப்பட்டு வந்தது.
மேலும், கமல்ஹாசனுக்கு கௌதமியின் மகளுக்கும் இருந்த சில பிரச்சனைகளால் ஆளை விடுங்கப்பா சாமி என எஸ்கேப் ஆனார் நடிகை கெளதமி. தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. அவரது புகைப்படங்கள் சிளது தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவரின் மகளின் பெயர் சுப்புலட்சுமி இந்த மகள் தன்னுடைய முதல் கணவர் மூலம் பெற்றெடுத்தார் கௌதமி.கமலின் மகள்கள் போல் தன்னுடைய மகளை எப்படியாவது அவரின் மகள்களுக்கு போட்டியாக சினிமாவில் முன்னணி நடிகையாக்க வேண்டும் என தொடர்ந்து பல இயக்குனர்களிடம் தன் மகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகிறாராம் கெளதமி.