"கடவுளை காப்பாற்ற யார் இருக்கா..?" - இயக்குனர் மோகன் ராஜா சுளீர் பதிவு..!


சமீபகாலமாக இந்து மதம் மற்றும் இந்து கடவுள்கள் குறித்த அவதூறுகளும், சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. பகுத்தறிவு என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை காயப்படுத்தி மதமாற்றம் தொடங்கி அரசியல் ஆதாயம் வரை தேடி திளைக்கும் கூட்டம் செய்யும் வேலை தான் இது.

இதற்கு ஆரம்ப காலம் முதலே கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும், தற்போது இதற்கு எதிராக கடந்த சில நாட்களாக கடுமையான எதிர்ப்புகள் வர தொடங்கியுள்ளன. கடவுளை வணங்கும் எல்லோருக்கும் தெரியும், ஒருவன் கத்தி எடுத்துக்கொண்டு நம்மை குத்த வந்தால் கடவுள் வந்து தட்டிவிட போவதில்லை என்று. அவர்கள் பார்வையில் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை.

நான் தவறு செய்தால் கடவுள் தண்டனை கொடுப்பார். நல்லது செய்தால் நிச்சயம் நம்மை நிம்மதியாக வைத்திருப்பார் என்ற அடிப்படை நம்பிக்கை. அது எந்த மதமாக இருந்தாலும் இது தான் உண்மை.

ஆன்மிகம் இல்லாத மனம் நிச்சயம் பொதுநலனை பற்றி சிந்திக்காது. சிந்திக்க தெரியாது. ஆன்மிகம் இல்லாத மனம் அமைதியாக இருக்காது, அமைதியாகவும் இருக்க முடியாது. விரைவில் இந்த கூட்டம் நம் தமிழ்மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படும் என நம்புவோம்.

இந்நலையில், இயக்குனர் மோகன் ராஜாவின், தன்னுடைய ட்விட்டர் பதிவில் அன்று, 3 வயது நிரம்பிய என் மகளுக்கு, சுவாமி கும்பிட கற்றுக் கொடுத்தோம். 'கடவுளை பார்த்து, இரு கரம் கூப்பி, அம்மா, அப்பா மற்றும் எல்லாரும் நல்லா இருக்கணும் என, வேண்டிக்கொள்' என்றோம்.

அவளும், சொல்லிக்கொடுத்தது போல், 'அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா...' என, தொடர்ச்சியாக, நாங்கள் சொல்லாத ஒன்றையும் கூறினாள்.'சுவாமி நல்லா இருக்கணும்' என்றாள். சரி தானே, நம்மை காப்பாற்ற சுவாமி இருக்கு; நம்மிடமிருந்து, சுவாமியை காப்பாற்ற யார் இருக்கா?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.