கையில் மதுகோப்பை - வேறு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் வனிதா - தீயாய் பரவும் புகைப்படம்..!
சர்ச்சை நடிகை வனிதா விஜயகுமாரின் சமீபத்திய திருமணம் பெரும் சர்ச்சையான நிலையில் இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனது திருமணம் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு வனிதாவும் பதிலடி கொடுத்து வருவதால் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா திருமண சர்ச்சை இணைய தளங்களிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி வருகிறது.
இந்த நிலையில் திடீரென வனிதா நேற்று டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரது திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் வனிதாவின் புகைப்படம் ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் அருகில் ஒரு நபர் வனிதாவின் தோளில் கை போட்டுக்கொண்டு நெருக்கமாக உட்கார்ந்திருக்கிறார்.
இருவரும், கையில் மதுகோப்பையை பிடித்தபடி உள்ளனர். இந்த புகைப்படத்தில் வனிதாவின் அருகில் இருக்கும் நபர் யார் என்ற கேள்வியை சமூக வலைதள பயனாளர்கள் எழுப்பி வருகின்றனர்.