"ஸ்டூடியோவை விட்டு வெளியே போடா.." - அட்வான்ஸ் கொடுக்காமல் தலைவரை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் இவர் தான்..!
தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் ரஜினியின் அர்ப்பணிப்பு குறித்து புகழாரம் சூட்டினர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
அவர் பேசியதாவது,எனது பிறந்தநாளை ரசிகர்கள்க ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். இது இசை வெளியீட்டு விழா அல்ல. எனது பிறந்தநாள் விழாவாக நினைத்துக் கொள்கிறேன்.
ரஜினிகாந்த் எனும் பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்கலாம் என பாலச்சந்தர் யோசித்துக் கொண்டிருந்தார். என்னை பார்த்து நம்பிக்கை வைத்து எனக்கு அந்த பெயரை வைத்தார். பாலச்சந்தர் என்னை நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போகல. நீங்களும் என்னை நம்புங்கள் உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
அட்வான்ஸ் கேட்டதால் அவமானம் :
சினிமாவுக்கு வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவரால் அவமதிக்கப்பட்டேன். படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்காமல் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு என்னை திட்டி துரத்தி விட்டார்.
அதனால் கோடம்பாக்கம் சாலையில் வெளி நாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.பின்னாளில் இத்தாலி கார் ஒன்றை வாங்கினேன். அதனை வெளிநாட்டு ஓட்டுநரை ஓட்ட வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றேன்.
தயாரிப்பாளர் ஒருவரால் அவமதிக்கப்பட்ட இடத்தில் எனது காரை நிறுத்தி சிகரெட்டை பற்ற வைத்தேன்.நாம் வாழ்க்கையில் வெற்றி பெற நேரம் காலம் சந்தர்ப்பம் சூழ்நிலை ஆகியவை ரொம்ப முக்கியம்.
அரசியல் , ஊடகம் , சமூக வலைதளங்கள் அனைத்திலும் எதிர்மறை வசனங்கள் அதிகமாகி விட்டது.அன்பு செலுத்துவோம், சந்தோசமாக இருப்போம், என நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மேலும் தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழக அரசு, நேரு அரங்கத்தில் அனுமதி அளித்தற்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் இப்படி பேசிய பிறகு, இவரை அவமதித்து யார்..? எந்த தயாரிப்பாளர்..? என்ற விவரத்தை அறிந்து கொள்ள ரசிகர்கள் துடியாய் துடித்தனர். அப்படியாவர்களுக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. ஆம், தயாரிப்பாளர் திரு.டி.என்.பாலு தான் எனக்கூறப்படுகிறது.
நடிகர் கமல் ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் அவர் இயக்கி, தயாரித்த "சட்டம் என் கையில்" என்ற படத்திற்காக தான் ரஜினியை நடிக்க அழைத்ததாகவும், அந்த சம்பவத்திற்கு பிறகு அதே கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்ததும் தெரிய வந்துள்ளது.